குஷியோ குஷி!! மலைபோல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் இல்லதரசிகள்!!!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,805 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிராமுக்கு ரூ.35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.4,770-ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 38,160-க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 38 குறைந்து ரூ.5,242 எனவும் விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 304 குறைந்து ரூ. 41,632-ஆக விற்பனையாகிறது.

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 61 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.61,000 ஆயிரமாக விற்பனையாகிறது.

மேலும், கடந்த வாரம் தங்கம் விலை அதிகரித்த நிலையில், இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.