ஷாக் கொடுக்கும் தங்கம் விலை; சவரனுக்கு ரூ.440 உயர காரணம் என்ன?

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 வரை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளையும், நடுத்தர மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில், 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,625 ரூபாய்க்கும், சவரன் 37,000 ரூபாய்க்கும் விற்பனையானது.

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் நான்காவது முறையாக அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்க்கெட்டில் தங்கத்தின் தேவை குறைந்ததால் கடந்த வாரம் முதலே விலையும் குறையத் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை யாருமே எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை கணிசமாக உயரத்தொடங்கியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 55 ரூபாய் அதிகரித்து 4,680 ரூபாயாகவும், சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்து 37, 440 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 55 ரூபாய் அதிகரித்து 5,082 ரூபாய்க்கும், சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்து 40,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை கிராமிற்கு 1.50 காசுகள் அதிகரித்து 61.50 ரூபாய்க்கும், கிலோவிற்கு 1,500 ரூபாய் அதிகரித்து 61,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே தங்கத்தின் விலை மீது உண்டாகும் அழுத்தம் அதனை நிலையற்றதாக மாற்றியுள்ளது. இதனால் தங்கம் விலை உயருமா?, குறையுமா? என்பதை தெரியாமலே குழப்பம் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment