பெரும் ஏமாற்றம்…. தங்கம் விலை கிடுகிடு உயர்வு: எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாவே நம் தமிழகத்தை பொறுத்த வரையில் தங்கம் விலையானது கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழலில் இன்றைய தினத்திலும் தங்கம் விலையாக அதிகரித்து வருகிறது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.4,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.38,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதனையடுத்து தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,210 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.616 அதிகரித்து ரூ.41,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளி 66.70 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.66.700 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.