உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஒரு கிராம் ரூ.8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,830 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ. 38,640-க்கு விற்பனையாகிறது.
அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன் படி, ஒரு கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,269 -ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 42,152 ஆக விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன் படி, ஒரு கிராம் 62 காசுகள் என்றும் ஒரு கிலோ 62,000 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது