ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

கடந்த சில தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிகரித்து வந்த நிலையில் இன்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,914 -க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ. 39,312-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் தூய தங்கத்தின் விலையும் இன்றைய தினத்தில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஒரு கிராம் ரூபாய் 5,361 ஆக விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூபாய்.216 அதிகரித்து ரூ. 42,888 ஆக விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 64.40 காசுகளாகவும் ஒரு கிலோ 64.400 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment