தங்கம் விலை மீண்டும் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவில் நிலவி வரும் ரெசசன் மற்றும் ஐரோப்பா நாடுகளில் வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பணவீக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலையானது வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் வாரத்தில் முதல் நாளான இன்றைய தினத்திலும் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது. அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து ரூ. 5,070 ஆக விற்பனையாகிறது. ஒரு பவுன் 40,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையம்: பொதுமக்களின் பேரணி நிறுத்தம்..!!!

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிராம் 5,472 எனவும் ஒரு பவுன் ரூபாய் 43,776 ஆக சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து வெள்ளியின் விலையும் 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 73.10 காசுகளாக விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ. 73 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

திருவள்ளூரில் மீனவர்களிடையே மோதல்: 4 பேர் காயம்!!

மேலும், வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு தங்கத்தின் தேவையானது அதிகரிக்க கூடும் என்பதால் விலை உயரும் என வியாபாரிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.