உச்சம் தொட்ட தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!!

கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக சரிந்த தங்கம் விலை இன்றைய தினத்தில் மீண்டும் எகிறியுள்ளது.

அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,100-ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் விலை ரூபாய் 480 அதிகரித்து 40,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் தூயத்தங்கத்தில் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 66 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,564-ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.528 அதிகரித்து ஒரு பவுன் ரூ.44,512 ஆக விற்பனையாகிறது.

இதனையடுத்து வெள்ளியின் விலை கிராமுக்கு 100 காசுகள் அதிகரித்து காணப்படுகிறது. அதன் படி, ஒரு கிராம் 74 காசுகளாகவும் ஒரு கிலோ தங்கம் 74 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தியுள்ளதால் வரும் காலங்களில் தங்கம் விலை அதிகரிக்க கூடும் என நகை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.