தினம்தோறும் விலைவாசியானது அனைத்து விதமான பொருள்களின் மீது உயர்ந்து கொண்டே வருகிறது. காய்கறிகள் தொடங்கி என்னை பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து விலைகளும் நாளுக்கு நாள் உயர்ந்தே காணப்படுகிறது.
இது மக்களுக்கு பெரும் இன்னலை கொடுப்பதாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தங்கம் ஆபரணத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து பேரதிர்ச்சியை உண்டாக்குகிறது.
இதனால் ஒரு சாமானியர் தங்கம் வாங்குவது கனவாகவே மாறிவிடும் என்று எண்ணும் அளவிற்கு காணப்படுகிறது. இந்த அசுர விலை உயர்வானது இன்றைய தினமும் தொடர்ந்து உள்ளதாக காணப்படுகிறது.
அதன்படி இன்றைய தினமும் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 40 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் ஆபர்ண தங்கம் கிராம ஒன்றுக்கு 5350 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விளைவாக சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 42800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே வேளையில் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்துள்ளது இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 74.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.