உச்சம் தொட்ட தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது.

அதன் படி, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4,770 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.424 அதிகரித்து ரூ.38,160 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து தூய தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.5,204 -ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு ரூ.464 அதிகரித்து ரூ.41,632 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை ரூ.66.30 ஆக விற்பனையாகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,300ஆக விற்பனையாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment