தமிழ் புத்தாண்டில் சரியான ஆப்பு..! 5000 ரூபாயை தாண்டிய கிராம்…!! 40 ஆயிரம் ரூபாயை தாண்டியது ஒரு சவரன்

கடந்த சில மாதங்களாக நம் தான் இந்தியாவில் அனைத்து விதமான பொருட்களின் விலையும் அதிகரித்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யா உக்ரேன் போருக்குப் பின்பு தமிழகத்தில் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையானது.அதன் பின்னர் திடீரென்று தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்தது.

இவ்வாறுள்ள நிலையில் மீண்டும் தமிழகத்தின் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்துள்ளது வர்த்தகர்கள் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 40048-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு பத்து ரூபாய் உயர்ந்துள்ளது.

இதனால் ஒரு கிராம் 5006 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 74 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது..

சென்னையில் கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 1488 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment