கடந்த சில தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிகரித்து வந்த நிலையில் இன்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது.
அதன் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.18 குறைந்து ஒரு கிராம் ரூ.4,795 -க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ. 38,416-க்கு விற்பனையாகிறது.
அதேபோல் தூய தங்கத்தின் விலையும் இன்றைய தினத்தில் குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக ஒரு கிராம் ரூபாய் 5,239 ஆக விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூபாய்.152 குறைந்து ரூ. 41,912 ஆக விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் சற்று குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 63 காசுகளாகவும் ஒரு கிலோ 63 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.