Connect with us

ஜெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை: இல்லத்தரசிகள் ஷாக்!!

202008241054364856 Tamil News gold price decreased today SECVPF

தமிழகம்

ஜெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை: இல்லத்தரசிகள் ஷாக்!!

கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இதனிடையே 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4, 676 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிராமுக்கு 13 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,689 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து ரூ. 37, 512 -க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,101- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,115-ஆகவும் பவுனுக்கு ரூ. 40,920 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் 62.50 காசுகளாகவும் ஒரு கிலோ 62.500 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top