Connect with us

விண்ணை முட்டும் தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்!!

gold rate 1200

தமிழகம்

விண்ணை முட்டும் தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்!!

கடந்த சில நாட்களாவே பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இதனிடையே இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,695 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிராமுக்கு ரூ.27 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,722 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 37,776-க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,122- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 29 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,151 -ஆகவும் பவுனுக்கு ரூ. 41,208 ஆக விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளி 58 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.58,000 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top