
தமிழகம்
உச்சம் தொட்ட தங்கம் விலை : விழிபிதுங்கும் இல்லதரசிகள்!!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன் படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4,666 என விற்பனையாகிறது. அதே போல பவுனுக்கு ரூபாய் 288 உயர்ந்து ரூபாய் 37,328 என விற்பனையாகி வருகிறது.
இதனிடையே தூய தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 5,068 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40,544 ஆக விற்பனையாகி வருகிறது.
மேலும், தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிலோ ரூபாய் 61,600 ஆக விற்பனையாகிறது.
