மலை போல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

கடந்த சில நாட்களாவே பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தங்கம் விலையானது கிடுகிடுவென குறைந்து காணப்படுகிறது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,685 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.37,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகை! சிறப்பு காட்சிகளை திரையிட அரசு அனுமதி..!!

இதனை தொடர்ந்து தூயத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5,111-ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 40,888-க்கு விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 61 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.61 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment