மலைப்போல் சரியும் தங்கம் விலை: நிம்மதியில் இல்லத்தரசிகள்..!!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தமிழகத்தில் தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது.

அதன் படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,835-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் பவுனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ. 38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து தூயத்தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,275-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பவுனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ. 42,200-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளி 62.50 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.61.50 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment