மலைப்போல் சரியும் தங்கம் விலை: குஷியில் நகைப்பிரியர்கள்!!

இந்தியாவை பொறுத்தவரையில் தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஆபரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக வே தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,760 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்படது. தற்போது கிராமுக்கு ரூ.25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.4735,-ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 37,880-க்கு விற்பனையாகிறது.

தேவர் தங்க கவசம் விவகாரம்: யாரிடம் ஒப்படைக்கப்படும்?

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,193- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,165ஆகவும் பவுனுக்கு ரூ. 41,320-ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் ஒரு கிராம் வெள்ளி 62.30 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.62 ஆயிரத்தி ரூ.300 ஆக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment