மலைபோல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச்செல்லும் நகை பிரியர்கள்!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினத்திலும் தங்கம் விலை மளமளவென குறைந்து காணப்படுகிறது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சவரனுக்கு ரூ.250 ஆக குறைந்து ஒரு பவுன் ரூ. 38,440 -க்கு விற்பனையாகிறது.

இதனை தொடர்ந்து தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 5,207-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுனுக்கு ரூ.280 குறைந்து தற்போது
சவரனுக்கு ரூ. 41,656-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் ஒரு கிராம் வெள்ளி 64.80 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.64 ஆயிரத்து 800 ஆக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment