மீண்டும் ரூ. 39 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிக்கிடையே தொடர்ந்து 9- வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் அத்தியாவச பொருட்களில் விலை உயர ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் பங்குசந்தையின் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெயை தொடர்ந்து தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 39,064 ஆக விற்பனையாகிறது. இதே போல் ஒரு கிராம் 4883 ஆக விற்பனையாகிறது.
இதனை தொடர்ந்து 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 42, 616 ஆகவும் ஒரு கிராம் 5,327 ஆக உயர்ந்து விறபனையாகுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
