நகை எடுக்க இதான் சான்ஸ்; ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கத்தின் விலை!!

தினம் தினம் விலைவாசி என்பது அனைத்து விதமான பொருட்களின் மீது அதிகமாகவே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக காய்கறிகள், மளிகை சாமான்கள், பெட்ரோல், டீசல் விலை ஓரளவு கணிசமாக தினந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.

அந்த வரிசையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது திடீரென்று உயர்வது விற்பனையாளர் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதிலும் குறிப்பாக பண்டிகை தினங்களான சில நாட்களாகவே தங்கத்தின் விலை சற்று உயர்ந்தே காணப்பட்டது. இதனால் தங்கம் வாங்குபவரின் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவியது.

இவ்வாறு உள்ள நிலையில் இன்றைய தினம் பலரும் எதிர்பாராத விதமாக தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது என்றே கூறலாம். அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 96 ரூபாய் குறைந்துள்ளது.

இதனால் ஆபரண தங்க சவரனுக்கு ரூபாய் 42,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலைவீழ்ச்சியின் விளைவாக 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 12 ரூபாய் குறைந்துள்ளது.

இதனால் ஒரு கிராம் ரூபாய் 5305 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேலையில் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 75.30 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.