அதிர்ச்சி! ஒரே நாளில் ரூ.40000ஐ தாண்டிய தங்கம் விலை!!

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,010-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.440 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செயற்கை நீர்வீழ்ச்சி வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு!!

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5412 ஆகவும் ஒரு சவரன் ரூபாய் 43,296 ஆக விற்பனையாகி வருகிறது

இதனை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.70.50 காசுகளாகவும், ஒரு கிலோ 70 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜல்லிக்கட்டு வழக்கு – உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி!!

மேலும், வரக்கூடிய மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என நகை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.