Connect with us

39 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்!!!

gold rate 1200

தமிழகம்

39 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்!!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிகரித்து நிலையில் இன்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,850 -க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ. 38,800-க்கு விற்பனையாகிறது.

இந்நிலையில் தூய தங்கத்தின் விலையும் இன்றைய தினத்தில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஒரு கிராம் ரூபாய் 5,290 ஆக விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூபாய்.40 அதிகரித்து ரூ. 42,320 ஆக விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 63 காசுகளாகள் எனவும் ஒரு கிலோ 63 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top