
Tamil Nadu
அதிரடியாக குறைந்த தங்கம் விலை; குஷியில் இல்லதரசிகள்!!
உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிரடியாக குறைந்துள்ளது.
இதனிடையே சென்னையில் ஆரணத்தங்கத்தின் கிராமுக்கு 71 ரூபாய் குறைந்துள்ளது. இதனிடையே ஒரு கிராம் 4,764 – ஆக விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு 38,112 ரூபாயாக விற்பனையாகிறது.
இதனை தொடர்ந்து தூயதங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 78 ரூபாய் குறைந்து தற்போது ரூ. 5,197 – ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு 41,576 ரூபாயாக விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையினை தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் 63.40- க்கும், ஒரு கிலோ 63, 400 -க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
