நகைக்கடன் தள்ளுபடி, இறந்தவர்களின் பெயரில் பென்ஷன்!: நிதியமைச்சர் விளக்கம்;

தற்போது தமிழகத்தில் நிதியமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் நகை கடன் தள்ளுபடி பற்றி பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி நகை கடன் தள்ளுபடி தொடர்பாக நீதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.பழனிவேல்

பொது நிதி மேலாண்மை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். இறந்தவர்கள் பெயரில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது என்றும் நிதி அமைச்சர் விளக்கமளித்தார்.

பிறப்பு, இறப்பு தொடர்பான பதிவுகள் மூலம் குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார்.

சில இடங்களில் எந்த நகையும் அடகு வைக்காமல் நகை கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் பழனிவேல் தியாகராஜன் கூறினார். தகுதியுள்ள முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

கூட்டுறவு வங்கிகளில் நடந்த நகை கடன் குளறுபடி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆய்வு அறிக்கை அளிக்க அடுத்த ஆண்டு மார்ச் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment