97.05 சதவீதம் நகைக் கடன் தள்ளுபடி..!!! ஆட்சிக்கு வந்த 10 மாசத்துல இவ்வளோ பெரிய சாதனையா!!
நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு விதமான அறிவிப்புகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக நகை கடன் தள்ளுபடி பற்றி யாரும் நினைத்திராத வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 97.05 சதவீதம் நகை கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் மட்டும் 97.05 சதவீதம் அளவுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.
நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம் தமிழகத்தில் சுமார் 12 லட்சம் பேர் பயனடைந்து உள்ளதாகவும் அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். நகை கடன் தள்ளுபடி ஆல் பயன் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 19 ஆயிரத்து 106 ஆக உள்ளது என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் பல மக்கள் இயக்கத்தோடு இருந்த நகை கடை நடத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதாக காணப்படுகிறது.
