உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் இன்றைய தினத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது.
இதனிடையே இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.4,849 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு 137 ரூபாய் குறைந்து ரூ. 38,792-க்கு விற்பனையாகிறது.
அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,270- ஆக இருந்தது. தற்போது ஒரு கிராம் 5,290 -ஆக விற்பனையானது. பவுனுக்கு ரூ.136 ரூபாய் குறைந்து ரூ. 42,320 ஆக விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் 61,10 காசுகளாகவும், ஒரு கிலோ 61. 100 ஆயிரமாக விற்பனையாகிறது.