மலைபோல் சரியும் தங்கம் : கொண்டாட்டத்தில் இல்லத்தரசிகள் !!

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.

ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த ஒரு மாதம் காலமாக உக்ரைன் மீது  குண்டு மழை பெய்து வருகிறது. இதனால் பங்குச் சந்தையில் பெரும் சரிவு காணப்பட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலையானது சற்று குறைந்து காணப்பட்டது. அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

இதனிடையே சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,796க்கும், 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.38,368க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 24 கிராம் தூயதங்கத்தின் விலையானது இன்று கிராமிற்கு 5,232 க்கும் சவரனுக்கு 41, 856க்கும் விற்பனையாகிறது.

மேலும், தங்கத்தின் விலையினை தொடர்ந்து வெள்ளியின் விலை சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.40க்கும், கிலோவிற்கு 72,300 க்கும் விற்பனையாகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment