தமிழகம்
உடனே வாங்குங்க..! தொடர்ந்து குறையும் தங்கம்.. எவ்வளவு தெரியுமா ?
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால் நகை வாங்கும் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாகவே தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினமும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
இதனிடையே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து ரூ 4,881- க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து 39, 048 ஆக விற்பனையாகிறது.
அதே போல் தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 5,325 ஆகவும் சவரனுக்கு ரூ. 42,600 – யாக விற்பனையாகிறது. தங்கத்தின் விலையினை தொடர்ந்து வெள்ளி விலையுல் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ 70.50 ஆகவும், ஒரு கிலோ 70,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
