அனைத்து காளைகளுக்கும் தங்க காசு!! அப்படி என்ன ஸ்பெஷல் ‘அலங்காநல்லூரில்’?

தமிழர்களின் வீர விளையாட்டில் ஒன்று ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் எங்கும் நடைபெறும். அதிலும் ஜல்லிக்கட்டு போட்டி என்றால் மிகவும் பிரபலமான பகுதி அலங்காநல்லூர் தான்.

இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பற்றி தெரியாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது காணப்படுகிறது. இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது.

இதில் பல சிறப்பு வாய்ந்த அம்சங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் என அனைத்தும் காணப்படுகிறது. அதன்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார்.

அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரி ஆகியோர் இந்த போட்டியை காண வருகை புரிந்துள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்  அனைத்து மாடு பிடி வீரர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் முதலில் முனியாண்டி கோவில், அரிய மலை கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் வழங்கப்படுகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆயிரம் காளைகள் இறக்கப்பட உள்ளதாகவும் தகவல் எடுத்துள்ளது. இதில் 350 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாடு பிடி வீரர் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 300 மாடுபிடி வீரர்கள் 25 பேர் கொண்ட குழு க்களாக களத்தில் இறக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசுகள் வழங்கப்படுகின்றன சிறப்பாக விளையாடும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தென் மண்டல ஐஜி  தலைமையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக உள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

இதனால் தான் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரபலமாக காணப்படுகிறது. மேலும் அவிழ்த்து விடப்பட்ட அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.