Connect with us

தடுப்பூசி போட்டால் தங்கக்காசு: அதிரடி அறிவிப்பு

Tamil Nadu

தடுப்பூசி போட்டால் தங்கக்காசு: அதிரடி அறிவிப்பு

1e7e62e44f8f70618e0830be43c2cf81

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் சுமார் 24 லட்சம் பேர்களுக்கு நேற்று ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

ஒரு சில நகரங்களில் தடுப்பூசி போட்டால் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் என்ற பகுதியில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் மூவருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் அனைவரது பெயரையும் குலுக்கிப் போட்டு மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நேற்று ரூபாய் 5000 மதிப்புள்ள தங்க நாணயம் வழங்கப்பட்டது

அதேபோல் வேதாரண்யம் என்ற பகுதியில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top