Connect with us

பொய் வழக்குகளால் திசை மாறிய வாழ்க்கை, திருடனாய் உருவெடுத்த எம்பிஏ பட்டதாரி

gold theft

செய்திகள்

பொய் வழக்குகளால் திசை மாறிய வாழ்க்கை, திருடனாய் உருவெடுத்த எம்பிஏ பட்டதாரி

நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து தங்கச்சங்கிலி திருட்டு சம்பவம். சென்னையை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி கைது.

கோவை மாவட்டம், அன்னூரில், சத்தி சாலையில் ஜெயகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இக்கடைக்கு கடந்த 9-ம் தேதி வந்த டிப்டாபாக வந்த மர்ம ஆசாமி ஒருவர், தான் பிரபல வங்கியின் மேலாளர் என கூறி ஜெயக்குமாரின் தாய் புவனேஸ்வரியிடம் தங்கச்சங்கிலி கேட்டுள்ளார். புவனேஸ்வரியும் தங்கச்சங்கிலிகளை எடுத்துக்காட்டியுள்ளார். அதில் ஒரு சங்கிலியை தேர்ந்தெடுத்து விட்டு,

மேலும் வெள்ளி காமாட்சி விளக்கு வேண்டும் என அந்த மர்ம நபர் கேட்டுள்ளார். இந்நிலையில் கடையின் உரிமையாளர் புவனேஸ்வரி உள்ளே சென்று வெள்ளி விளக்கு எடுத்து வரும் கண்ணிமைக்கும் நேரத்தில், 2 பவுன் தங்கச்சங்கிலியை திருடி விட்டு, அங்கிருந்து மர்ம நபர் வெளியே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தில் தப்பினார்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் விரைந்து வந்து, அக்கடையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியதுடன், வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார், திருடனைப் பின் தொடர்ந்து தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அன்னூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது ஒருவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த ரவி (எ) சீசிங் ரவி(40)என்பதும், எம்பிஏ பட்டதாரி என்பதும்,அன்னூரில் உள்ள நகைக்கடையில் திருடியது அவர் தான் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து அன்னூர் போலீசார் சீசிங் ரவி இடம் மேற்கொண்ட விசாரணையில் ” தான் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்திற்கு எதிரே தற்போது ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்து நடத்தி வருவதாகவும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் சென்னையில்,வேளச்சேரி பகுதியில் வீட்டுமனை வாங்குவதற்காக அங்குள்ள ஒரு முக்கிய புள்ளியிடம் மாதத் தவணையாக பணத்தை கட்டி வந்துள்ளார். குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு தனக்கு அந்த வீட்டுமனையை எழுதி வைக்குமாறு அந்த முக்கிய புள்ளியிடம் கேட்டுள்ளார்.

அவர் அதை மறுக்கவே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக சீசிங் ரவி அந்த மர்ம நபரை எச்சரித்துள்ளார். இதனால் சீசிங் ரவியை பழிவாங்க நினைத்த அந்த முக்கிய புள்ளி தனது பலத்தால் பல்வேறு காவல் நிலையங்களில் பொய் புகார் கொடுத்து, தன்மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குப்பதிவு செய்து சிறைக்குச் சென்றதாகவும், இதனால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் சிறையில் இருக்கும் பொழுது அங்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டு,

இருவரும் இணைந்து சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தான், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நீதிமன்றத்தின் எதிரே ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையை வைத்து நடத்தி வருவதாகவும், அதில் நான் எனது மனைவி, மகன் ஆகியோர் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் சிகிச்சைக்காக பல்வேறு நபர்களிடமிருந்து வட்டிக்கு பணம் பெற்று, மருத்துவ செலவுகளை செய்து வந்ததாகவும்,

கடந்த இரண்டு வருடமாக வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபடாமல் இருந்து வந்தேன். தற்பொழுது நிதி நெருக்கடி ஏற்பட்டதால், மீண்டும் திருடி சம்பாதிக்க ஆசைப்பட்டேன். அதனால் தான் அன்னூரில் உள்ள நகைக்கடையில் இருந்து நகையை திருடினேன் என்று தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் சீசிங் ரவி கூறியுள்ளார். இதனை அடுத்து அன்னூர் போலீசார், சீசிங் ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top