ஒரு சவரன் ரூ.41,000ஐ தாண்டியது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது முதல் முறையாக தங்கம் விலை ஒரு சவரன் 41 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 5115 என்று விற்பனையாகி வந்த நிலையில் இன்று 15 ரூபாய் அதிகரித்து 5130 என விற்பனையாகிறது. எனவே இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் 41 ஆயிரத்து 40 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளி விலை இன்று ஒருகிலோ 74 ஆயிரத்து 300 என விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து கொண்டே இருப்பது நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்பதும் கடந்த ஒரு வருடத்தில் தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.