தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6000 என்றும் ஒரு சவரன் 48 ஆயிரம் என்றும் விற்பனை ஆகும் என்று தங்க நகை வியாபாரிகள் கூறியிருந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர்கள் கூறியபடி தற்போது தங்கம் விலை ஒரு கிராம் 6 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது நகை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை நேற்றைய விலையை விட இன்று 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5775 என விற்பனை ஆகி வருகிறது. அதே போல் தங்கம் விலை ஒரு சவரன் 200 ரூபாய் உயர்ந்து 46,200 என விற்பனை ஆகி வருகிறது. கடந்த வாரம் ஒரு கிராம் தங்கம் ரூ.5600 என விற்பனையாகி வந்த தங்கம் விலை ஒரே வாரத்தில் 175 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும், 1400 ரூபாய் ஒரு சவரனுக்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் அனேகமாக அடுத்த வாரம் தங்கம் விலை ஒரு கிராம் 6000 என்று விற்பனையாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இன்னும் சில மாதங்களுக்கு தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயரும் என்றும் அனைவரும் எதிர்பார்த்த தங்கம் விலை ஒரு கிராம் பத்தாயிரம் என்பது 2025 ஆம் ஆண்டுக்கு முன்பே வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் திருமண சீசன் என்பதால் தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பது ஆகியவை தங்க விலை அதிகரிப்பதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அமெரிக்க சந்தையில் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
எனவே தங்கம் விலை வெகுவாக உயர்ந்து விட்ட து என்று எண்ணாமல் இப்போது தங்கம் வாங்கினால் கூட அது எதிர்காலத்திற்கு நல்ல முதலீடாகத்தான் இருக்கும் என முதலீட்டு ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.82,800 என்று இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 900 ரூபாய் உயர்ந்து ரூ.83,700 என விற்பனை ஆகி வருகிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் வெள்ளியின் விலை ஒரு கிலோ ஒரு லட்சம் என மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.