தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு..பழைய விலைக்கு எப்போது செல்லும்?

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் ஒரு சில நாட்கள் சரிந்தாலும் மீண்டும் அடுத்த நாளே உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். தங்கத்திற்கு ஆன இறக்குமதி வரி அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு மற்றும் இந்தியாவில் திருமண சீசன் தொடங்குவதால் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைவதை அடுத்து முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வதன் காரணமாகவும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

gold theft

இந்த நிலையில் இன்று தங்கம் ஒரு கிராமுக்கு 20 ரூபாய் ஒரு சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 5620 என்றும் ஒரு சவரன் 44 1960 என்றும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6086 என்றும் ஒரு எட்டு கிராம் 48,688 என்றும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளியை பொறுத்தவரை ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து 80 ஆயிரம் என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் குறைந்து வந்தாலும் நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றும் மீண்டும் பழைய நிலைக்கு அதாவது 4500, 5000 ரூபாய் என்ற விலைக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்றும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

எனவே குறைந்து வரும் போது அதை வாங்குவதற்கு ஒரு வாய்ப்பாக கருதி அந்த நேரத்தில் தங்கத்தை அதிகமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் தங்கம் மிக அதிக அளவில் குறைய வாய்ப்பில்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.