ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம்.. தங்கநகை பிரியர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை உச்சத்திற்கு சென்றது என்பதையும் பார்த்தோம். மே இரண்டாம் தேதி ஒரு கிராம் தங்கம் 5615 என விற்பனை ஆகி வந்த நிலையில் நேற்று மே 7ஆம் தேதி 5775 என விற்பனையானது. நான்கே நாட்களில் ஒரு கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஏறிய வேகத்தில் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் 83 ரூபாய் குறைந்து இருக்கிறது என்பதும் ஒரு சவரன் தங்கம் 664 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5692 என்றும் ஒரு சவரன் ரூ.45,536 என்றும் விற்பனை ஆகி வருகிறது. 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6162 என்றும் எட்டு கிராம் 49296 என்றும் விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை போலவே வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று வெள்ளி விலையும் கடுமையாக சரிந்து உள்ளது. வெள்ளி ஒரு கிராம் 1 ரூபாய் 30 காசு குறைந்துள்ளது என்பது ஒரு கிலோ 1300 ரூபாய் குறைந்து 82, 400 என விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை தற்காலிகமாக குறைந்தாலும் மீண்டும் தங்கம் விலை உயர தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் இறங்குவதை வாங்குவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்கத்தை வாங்கி சேமித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் தங்கம் கண்டிப்பாக நல்ல லாபத்தை கொடுக்கும் என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் தங்கம் ஒரு கிராம் 6 ஆயிரம் என்ற விலைக்கு வரும் என்றும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.