படிப்படியாக குறையும் தங்கம் விலை.. மீண்டும் ரூ.5000க்குள் வருமா?

தங்கம் விலை கடந்து சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 5200-க்கு மேல் அதிகரித்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் 5000க்குள் தங்கம் மீண்டும் வருமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராம் 5,295 மற்றும் ஒரு சவரன் 42,360 என விற்பனையாகி வருகிறது.

அதே போல் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,679 என விற்பனை ஆகி வருகிறது. தங்கத்தை போலவே வெள்ளியும் ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து உள்ளது என்பதும் இன்றைய நிலையில் சென்னையில் வெள்ளி விலை ரூ.74.80 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தங்கத்தின் சந்தை உயர்ந்துள்ளதாகவும் அதே போல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும் தான் தங்கத்தின் விலை உயர்ந்து உயர்ந்தது என்பதும் தற்போது மீண்டும் இறங்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.