விண்ணை தொடும் தங்கம் விலை: இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய ஆபரண தங்கம் ஒரு கிராம் 19 ரூபாய் உயர்ந்து 5106 என்றும் ஒரு சவரன் 152 ரூபாய் உயர்ந்து ரூ.40,840 என்றும் விற்பனையாகி வருகிறது. அதே போல் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5507 என்றும் ஒரு சவரன் 44,056 என்றும் சென்னையில் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் 60 காசுகள் உயர்ந்து ரூ.74.60 என்றும் ஒரு கிலோ வெள்ளி விலை 600 ரூபாய் உயர்ந்து ரூ.74,600 என்றும் விற்பனையாகி வருகிறது. நேற்றைய விலையை விட இன்று தங்கம் ஒரு கிராம் 19 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பதும் ஒரு சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் என்பது ஆபரணங்களாக மட்டுமின்றி ஒரு சிறந்த சிறுசேமிப்பாகவும் பொதுமக்கள் கருதி வரும் நிலையில் தங்கத்தை எளிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு அதன் விலை உச்சத்திற்கு சென்று உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் இந்த விலையில் தங்கம் வாங்கினால் கூட இனி வரும் காலங்களில் இதை விட உயரும் என்பதால் தங்கம் எப்போதுமே ஒரு சிறு மிகச்சிறந்த முதலீடு என்று பொருளாதார அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது டிஜிட்டலில் தங்கம் கிடைப்பதால் தங்கத்தை ஏதாவது ஒரு வழியில் வாங்கலாம் என்றும் தங்க சேமிப்பு திட்டங்கள் டிஜிட்டல் தங்கம் உள்பட பல வழிகளில் தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பதே பாதுகாப்பானது என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.