கோகுல்ராஜ் வழக்கு! மயங்கி விழுந்த சுவாதி… நீதிமன்றத்தில் பரபரப்பு!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் பட்டதாரியான இவர் வேறு சமூகத்தை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணை காதலித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் 23.6.2015-ம் ஆண்டு காதல் ஜோடிகள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பின்னர் கோகுல்ராஜ் தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் வேறு சமூகத்தினரை சேர்ந்த பெண்ணை காதலித்ததின் காரணமாக கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. கொலை சம்பவம் தொடர்பாக யுவராஜ் உட்பட 10 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று மீண்டும் வந்தது. அப்போது சாட்சியாக சுவாதி ஆஜரானார். அப்போது சிசிடிவி காட்சிகள் அவரிடன் காண்பிக்கப்பட்டது. இதனை பார்த்த சுவாதி சிசிடிவி காட்சியில் தெரிவது நான் இல்லை என்ற ஒரு பதிலை தெரிவித்தார்.

இதன் காரணமாக அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். தற்போது நீதிமன்றத்தில் உள்ள மருத்துவமனையில் சுவாதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.