ராமேஸ்வரம் கோவில் செல்ல நீராட இன்றும் தடை

a6b728f8063ddf66bdbd6c363d2e5b68

கொரோனா பெருந்தொற்று பரவும் அபாயத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட கோவில்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முக்கியமாக சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் கோவில்களில் பெருங்கூட்டம் கூடும் என்பதால் அந்த நாட்களில் கோவில்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. திங்கட்கிழமையில் கோவில் திறக்கலாம்

தற்போதும் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இன்று மூன்று நாட்கள் அடைத்த பின்னரும் ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்கள் இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் தேசிய அளவில் பிதுர் பரிகார ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரத்துக்கு இந்தியா முழுவதும் இருந்து யாத்ரீகர்கள் வருகின்றனர். கடந்த ஆடி அமாவாசைக்கு கோவில்கள் அடைக்கப்பட்டதால் அமாவாசை தினமான இன்று மக்கள் கூட்டம் வந்து குவிந்து விடும் என்ற காரணத்தால் வழக்கமாக திங்கட்கிழமை திறக்கப்படும் ராமேஸ்வரம் கோவில் இன்றும் அடைக்கப்படுகிறது.

நாளை முதல் கோவில் திறக்கப்படும் என தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.