குழந்தைகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறேன்… சன்னி லியோனேவின் திடீர் முடிவு!!

கரெஞ்சித் கவுர் வோரா என்னும் இயற்பெயர் கொண்ட சன்னி லியோனே பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். இவர் 2004 ஆம் ஆண்டு தி கேர்ள் நெக்ட் டோர் என்னும் திரைப்படத்தின்மூலம் நடிகையான அறிமுகமானார்.

துவக்கத்தில் ஹாலிவுட் படங்களில் நடித்துவந்த இவருக்கு 2012 ஆம் ஆண்டு ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது. சூட்டவுட் வித் வடல, ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ் 2, டின்னா அன்ட் லோலோ போன்ற பாலிவுட் படங்கள் இவருக்கு பெரிய வரவேற்பினைக் கொடுத்தன.

b821f94316381552755af844bb5cd512

தமிழ் சினிமாவில் வடகறி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார், பாலிவுட்டில் சினிமாவைவிட இவருக்கு அதிக வரவேற்பினைக் கொடுத்தது இந்தி பிக் பாஸ் 5 தான் ஆகும். பிக் பாஸில் கலந்துகொண்ட பிறகு இவரது மனிதநேயம், அன்பான குணம் பலருக்கும் பிடித்துப் போனது.

இவர் 2011 ஆம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர் நிஷா என்ற தென் ஆப்ரிக்க பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவரது இந்த செயலுக்காக இவரைப் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை.

சன்னி லியோன் இரண்டு மகன்கள், மகள், கணவருடன் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு செல்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர், “குழந்தைகளை கொரோனாவிடமிருந்து பாதுகாக்க நான் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்க செல்லத் திட்டமிட்டுள்ளேன். தோட்டத்துடன் அங்கு உள்ள வீடு இப்போதைக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment