Connect with us

ஞாயிற்றுக்கிழமை நடக்கிற ஜல்லிக்கட்டுக்கு இன்று டோக்கன்…!! இடையில் தள்ளுமுள்ளு; போலீசார் தடியடி!

ஜல்லிக்கட்டு

தமிழகம்

ஞாயிற்றுக்கிழமை நடக்கிற ஜல்லிக்கட்டுக்கு இன்று டோக்கன்…!! இடையில் தள்ளுமுள்ளு; போலீசார் தடியடி!

ஞாயிற்றுக்கிழமை நடக்கிற ஜல்லிக்கட்டுக்கு இன்று டோக்கன்…!! இடையில் தள்ளுமுள்ளு; போலீசார் தடியடி!

தொன்றுதொட்ட தமிழன் எப்போதும் விளையாட்டிலும் கூட வீரத்தை மையமாகக் கொண்டே காணப்படுவான். அந்த படி பொதுவாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டால் ஜல்லிக்கட்டு போட்டிகள் பற்றிய அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும்.

இந்த நிலையில் தற்போது சித்திரை திருவிழா நெருங்கிவிட்டதால் தமிழகத்தில் உள்ள ஏராளமான பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் வினியோகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் களத்தில் இறங்கி தடியடி நிகழ்த்தியதாக தெரிகிறது. அதன்படி மதுரை-கரடிக்கல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க டோக்கன் முண்டியடித்தவர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

டோக்கன் பெற முயன்றவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 10ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top