கோவில்களில் விஐபி கடவுளே…!! விஐபி என்ற பெயரில் இடையூறு செய்தால் கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்!!
பொதுவாக கோவில்களில் விஐபி தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக பெரிய பெரிய கோவில்களில் விஐபி தரிசன டிக்கெட்டுகள் அதிகளவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து உயர்நீதிமன்ற கிளை கருத்துக் கூறியுள்ளது. அதன்படி கோவிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி என்று கூறியுள்ளது. மத நம்பிக்கை உள்ளவர்களே கோவிலுக்கு வருகின்றனர்; கோவிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறினர்.
கோவிலில் விஐபிகள் என்னும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறினர்.
திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியது. விஐபிகளுக்கு வழங்கப்படும் சலுகை அவர்களுக்கு பொறுப்புக்கானதே தவிர தனி நபருக்கான அல்ல என்றும் உயர் நீதிமன்ற கிளை கூறியது.
பொறுப்பு கான மரியாதை வழங்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஹைகோர்ட் கூறியது.
