கிருஷ்ணர் புகழ்பாடும் துவாரகை கோவில்

பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா துவாரகையில் வாழ்ந்ததாகவும். அவர் துவாரகையை ஆட்சி செய்ததாகவும் புராணங்கள் கூறுகிறது. துவாரகை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். குஜராத் மாநிலத்தின் துவாரகை மாவட்டத்தில் தேவபூமி என்ற இடத்தில்தான் இக்கோவில் உள்ளது.

இந்த கோவில் துவாரகதீசர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் கட்டப்பட்டு 1500 ஆண்டுகள் ஆகின்றனவாம்.கிருஷ்ணரின் பேரன் என்று சொல்லக்கூடிய வஜ்ரநாபி என்பவர் இக்கோவிலை கட்டி இருக்கிறார். இக்கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும்.

இக்கோவில் அரண்மனை போன்று காட்சியளிக்கிறது. உண்மையான துவாரகை நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த துவாரகை நகரம் புதிதாக உருவான நகரம் ஆகும்.

இங்கு கிருஷ்ணருக்கு மட்டுமின்றி அவரது அண்ணன் பலராமனுக்கும் அவரது குருவான துர்வாசருக்கும் கூட தனி சன்னதி உள்ளது.

துர்வாச முனிவரின் கோபத்திற்கும் சாபத்திற்கும் கிருஷ்ணரின் மனைவி ருக்மணி ஆளானதால் சில காலம் ஊருக்கு வெளியே தனித்து இருந்தாராம். அதனால் ருக்மணிக்கு ஊருக்கு வெளியே கோவில் உள்ளது.

பாலைவனத்திலேயே நடந்து வந்து பக்த மீரா கண்ணனுடன் இரண்டற கலந்தது இந்த கோவில்தானாம்.

காலையில் இங்கு நடைபெறும் பூஜை வித்தியாசமானது இதை உடாபன் என்று கூறுகிறார்கள். அப்போது கிருஷ்ணருக்கு தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் படைக்கப்படுகிறது. பின்பு சில மணி நேரத்தில் தீர்த்தமும் பிரசாதமும் படைக்கப்படுகிறது.   மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து அமுதும் சிற்றுண்டியும் படைக்கப்படுகிறது. அதன்பிறகு பழங்கள் கொடுக்கப்படுகின்றன. பிறகு செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் உறங்க செல்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு போக் என அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகை மாவட்டத்தில் உள்ள இந்த கோவில் கண்டிப்பாக நாம் பார்க்க வேண்டிய கோவிலாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.