Connect with us

பக்ரீத்தின் எதிரொலி: வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.7 கோடி வரை ஆடு விற்பனை!!

goat

தமிழகம்

பக்ரீத்தின் எதிரொலி: வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.7 கோடி வரை ஆடு விற்பனை!!

பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேப்பூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு ஊர்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால், பக்ரீத் பண்டிகையில் ஆடுகளின் வரத்து என்பது குறைவாக இருக்கும் என்று வியாரிகள் நினைத்தனர்.

ஆனால் இதனை மாற்றும் விதமாக கடலூர் மாவட்டத்தில் இருக்கும் வேப்பூர் வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி தற்போது 7 கோடி வரையில் ஆடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது.

மேலும், ஆடுகளை வாங்குவதற்காக இஸ்லாமியர்கள் மற்றும் இறைச்சி கடைக்காரர்கள் காலைமுதலில் இருந்தே வாரத்தந்தையில் திரண்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top