தற்போது நம் தமிழகத்தில் ஆவின் பாலகம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து தமிழகத்தின் தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசியுள்ளார்.
அவர் நிகழ்ச்சி ஒன்று கலந்துள்ள போது ஆவின் அடுத்துள்ள திட்டங்கள் பற்றியும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை பற்றியும் பேசினார். அதில் ஆவின் நிறுவனம் 4.3600000 பால் உற்பத்தியாளர் மூலம் நாள் ஒன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் கொள்முதல் செய்து 26.68 லட்சம் நுகர்வோருக்கு நாள்தோறும் தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது என்று அவர் கூறினார்.
மேலும் அவை கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் பேசினார். வரும் காலங்களில் இவைகளை மாற்றி ஆவினில் நாட்டு மாட்டு பால் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆவினில் நாட்டுமாட்டு பால் விற்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதனை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஆவின்பால் அதிக விலைக்கு விற்போர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இறுதியில் அவர் ஆவினில் மாட்டுப்பால் மட்டுமில்லாமல் ஆட்டுப்பாலும் விற்பனை செய்யப்படும் என்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் தகவல் அளித்தார். இது விவசாயிகளிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது.