கோட் படத்துல டபுள் தமாக்கா!.. விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன யுவன் சங்கர் ராஜா!..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறி தளபதி ரசிகர்களை தலைகால் புரியாமல் ஆட வைத்துள்ளார்.

கோட் படத்தில் 2 பாடல் பாடிய விஜய்:

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மல்டி ஸ்டார் நடிகர்களுடன் விஜய் இணைந்து நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது.

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக கழுவி ஊற்றப்பட்டது. லியோ படத்தின் இரண்டாம் பாதி சொதப்பலாக இருந்ததாக விஜய் ரசிகர்களே பலரும் அந்தப் படத்தை கேலி செய்ய ஆரம்பித்தனர்.

இந்த ஆண்டு கில்லி படத்தை ரீரிலீஸ் செய்து 30 கோடி வரை வசூல் செய்த நிலையில், விஜய் ரசிகர்கள் தியேட்டரில் தளபதி தரிசனத்தை பார்க்க உலகம் முழுவதும் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த நிலையில், கோட் மற்றும் தளபதி 69 படங்களுடன் தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த இரண்டு படங்களையும் ரசிகர்கள் பார்க்க ஆவலாக உள்ளனர்.

மறைந்த கேப்டன் விஜயகாந்த்தை மீண்டும் கோட் படத்தில் விஜய்க்காக வெங்கட் பிரபு கொண்டு வந்துள்ள நிலையில், அவரைப் பார்க்கவே தனிக் கூட்டம் தியேட்டருக்கு வரும் என தெரிகிறது.

யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்:

பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, வைபவ் மற்றும் பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் அசால்டாக ஆயிரம் கோடி வசூலை எட்டி வரும் நிலையில் தமிழ் சினிமா இன்னமும் 600 கோடி வசூலுக்கு மேல் ஒரு இன்ச் கூட நகர முடியாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் கோட் படத்தின் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை சாத்தியமாக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா இசையில் ‘ விசில் போடு’ பாடலை நடிகர் விஜய் பாடினார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா போட் படத்தில் நடிகர் விஜய் மொத்தம் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என்கிற சூடான தகவலை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews