ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பெரும்பாலான ஆட்டு இறைச்சி கடைகளில் மாட்டிறைச்சி கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இந்நிலையில் புகாரையடுத்து இன்றைய தினத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக கருங்கல் பாணையம் வீரப்பன் சந்திரம் உள்ளிட்ட மாநகராட்சி இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அப்போது குளிர்பானங்களில் வைத்திருந்த 15 கிலோ ஆடு மற்றும் கோழி உள்ளிட்ட சுமார் 15 கிலோ இறைச்சிகளை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
அதே போல் ஆட்டு இறைச்சியை மாட்டு இறைச்சி உடன் வியாபார லாபத்திற்காக கலந்து விற்க முயன்றது அதிகாரிகள் மூலம் அம்பலமானது.
அதோடு இது போன்ற சோதனைகள் பலப்பகுதிகளில் நடத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோலாகா அமைந்துள்ளது.