Connect with us

தனியே தன்னந்தனியே.! சைக்கிளில் ஒற்றை ஆளாக சென்று வாக்கு சேகரிப்பு!

election campaign

Tamil Nadu

தனியே தன்னந்தனியே.! சைக்கிளில் ஒற்றை ஆளாக சென்று வாக்கு சேகரிப்பு!

தனியே தன்னந்தனியே.! சைக்கிளில் ஒற்றை ஆளாக சென்று வாக்கு சேகரிப்பு!

நம் தமிழகமே தற்போது தேர்தல் களமாக மாறியுள்ளது. ஏனென்றால் தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. குறிப்பாக இந்த முறை பெண் வேட்பாளர்கள் அதிக அளவு களமிறங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் தேர்தல் நடைபெற இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில் வேட்பாளர்கள் விதவிதமான முறைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பலரும் மக்களை கவரும் விதமாக டீக்கடைக்கு சென்று டீ விற்றும், தையல் கடைக்கு சென்று துணி தைக்கும் அங்குள்ள மக்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பொதுவாக வாக்கு சேகரிக்கும் போது கூட்டமாகத்தான் வேட்பாளர் செல்வார். ஆனால் கன்னியாகுமரியில் ஒரே ஆளாக சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் நபர் அதிகளவு பேசப்பட்டு வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 46 வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சைக்கிளில் ஒற்றை ஆளாகச் சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். தன்னந்தனியே அவர் சைக்கிள் ஓட்டி அங்குள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top