சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பு நடித்துள்ள நிலையில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#AnnaattheDeepavali ku ready ah?!@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer #Annaatthe pic.twitter.com/RVVIqO0xJS
— Sun Pictures (@sunpictures) July 1, 2021