Connect with us

2023 ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!-பேரவையில் ஸ்டாலின்;

stalin 3

News

2023 ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!-பேரவையில் ஸ்டாலின்;

2023 ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!-பேரவையில் ஸ்டாலின்;

இன்றைய தினம் தமிழகத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற உள்ளதாக காணப்பட்டது. இதில் எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியை பார்த்து பல்வேறு விதமான கேள்விகளை முன்வைத்தனர்.

அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உலக முதலீட்டாளர் மாநாடு பற்றி பேசியுள்ளார் அதன்படி 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்று கூறினார்.

சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு அறிவித்துள்ளார். அப்போது பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தற்போது வரையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது என்று கூறினார்.

புரிந்துணர்வு உடன்பாடுகளால் ரூபாய் 60 ஆயிரத்து 375 கோடி முதலீடும் 205802 இரண்டு பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். துபாய் பயணத்தின் மூலம் ரூ 6,500 கோடி மதிப்பீட்டில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

துபாய் பயணம் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறச் செய்யவும் தான் அமைந்தது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். தமிழ் நாட்டில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் அன்னிய நேரடி முதலீடு 49 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top